Home செய்திகள் நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

by mohan

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் கடந்த 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் ஆகியோர் முன்னிலையில் இருந்து வந்தனர்.

நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்தி ஆகியோர் பின் தங்கினர்.  விக்கிரவாண்டியில் மதியம் ஒரு மணியளவில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன், 44 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இதே போல் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். பிற்பகல் 2.45 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது.ரெட்டியார்பட்டி நாராயணன், 32 ஆயிரத்து 333 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  இடைத்தேர்தல் நடந்த 2 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றிருப்பதன்மூலம், சட்டசபையில் அதிமுகவின் பலம் உயர்ந்துள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!