உசிலம்பட்டி நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்

உசிலம்பட்டி நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி சார்பில் நகரப்பகுதிகளில் பொதுமக்களுக்கு டெங்கு வரவிடாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது. மேலும் பொதுமக்களிடம் டெங்கு கொசு உற்பத்தியாகும் விதம், எங்கெங்கு கொசுக்கள் உற்பாத்தியாகிறது போன்றவைகளை நகராட்சி அதிகாரிகள் எடுத்துரைத்தனர். மேலும் பழைய டயர், தேங்காய்கூடுகள், வீட்டில் உள்ள தொட்டிகள் போன்றவைகளில் மழைநீர் தேங்கவிடாமல் பாதுகாக்க வேண்டுமென பொதுமக்களிடம் கேட்டுகொண்டனர். இந்த முகாம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழச்சியில் கோட்டாட்சியர் சௌந்தர்யா, வட்டார வளர்ச்சி மருத்துவர் சுசிலா, நகராட்சி ஆணையாளர் அழகேஸ்வரி, சுகாதார துறை அதிகாரி அகமதுகபீர், சித்தா பிரிவு மருத்துவர்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் தொட்டப்பநாயக்கணூர் சுகாதார செவிலியர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..