உசிலம்பட்டி அருகே பணம் தர மறுத்த தாயை உலக்கையால் அடித்து கொலை செய்த மகன்

உசிலம்பட்டி அருகே பணம் தர மறுத்த தாயை மகன் உலக்கையால் அடித்துக் கொலை செய்த சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதியம்மாள்(68).இவருடையமகன் முத்துப்பாண்டி(32).இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன.கணவர் இறந்து விட்ட நிலையில் ஜோதியம்மாள் தனியே வசித்து வருகிறார்.முத்துப்பாண்டி ஆசாரித்தொழில் செய்து வந்த நிலையில் உள்ளுரில் நிறைய நபர்களிடம் கடன் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.இதனால் அவ்வப்போது தன் தாயிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.சம்பவத்தன்று காலையில் வழக்கம் போல் முத்துப்பாண்டி தாயிடம் பணம் கேட்டுள்ளார்.ஜோதியம்மாள் கொடுக்க மறுக்கவே ஆத்திரத்தில் அருகிலிருந்த உலக்கையை எடுத்து தாயை அடித்து கொலை செய்து விட்டு தலைமறைவானார்.சேடபட்டி போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.பின் போலிசார் தேடுவதையறிந்த முத்துப்பாண்டி உசிலம்பட்டி காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image