கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் சார்பில் சமூக சேவை புரிந்தோருக்கு விருது..

கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் சார்பில் சமூக சேவை புரிந்தோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது கீழக்கரை ரோட்டரி சங்கத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட ஆளுநரின் அதிகாரப்பூர்வ வருகையின்போது இந்தப் பகுதியில் சிறப்பாக சேவை புரிந்தோருக்கு தொழிற்துறை சிறப்பு விருது (Vocational Excellent Award)  கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வருடம் இந்த விருது நாகேஸ்வரி, ஹபீப் முகம்மது, ராஜு, சரஸ்வதி, விஜயராமு மற்றும் கிழக்கு நண்பர்கள் தர்ம அறக்கட்டளை ஆகியோருக்கு வழங்கப்பட்னது.

அந்த வகையில் இன்று 22/10/2019 நடந்த விழாவில் ஆறு நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் முனிய சங்கர்,  பட்டய தலைவர் அலாவுதீன் முன்னிலையில்,  ரோட்டரி மாவட்ட ஆளுநர் டாக்டர் ஷேக் சலீம் வழங்கினார்.  சங்கத்தின் ஆண்டறிக்கைஅதை செயலாளர் முஹம்மது ஹசன் வாசித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் செல்வ நாராயணன்,  முன்னாள் தலைவர்கள் டாக்டர் ராஷிக்தீன், அப்பாஸ் மாலிக், சுந்தரம், பாலசுப்பிரமணியன் மற்றும் உறுப்பினர்கள் சித்திரவேலு, எபன், மரியதாஸ், சதக்கத்துல்லா, தவமணி மற்றும் மாநாட்டு சேர்மன், அவார்டு கமிட்டீ சேர்மன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image