சீன பட்டாசு வெடித்தால் கடுமையான நடவடிக்கை..!

“சீன பட்டாசுகளை இறக்குமதி செய்து பதுக்கி வைத்து விற்பனை செய்வோர் மற்றும் அதை வாங்கி வெடிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என, சுங்கத்துறை முதன்மை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புற்றீசல்போல் வீதிகள் தோறும் பட்டாசு கடைகள் முளைப்பது வழக்கம். தமிழகத்தின் குட்டி ஜப்பான் என வர்ணிக்கப்படும் சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள், சராசரி மனிதனின் கேட்கும் திறனுக்கு தகுந்தது.ஆனால் சீன பட்டாசுகளில், எளிதில் தீப்பற்றும் பொட்டாசியம் குளோரைடு அதிகம் சேர்க்கப்படுகிறது. இதனால் அவைகள், அதிக சத்தம் மற்றும் கூடுதல் வண்ணங்களை வெளிப்படுத்துகிறது. இது, சுற்றுச்சூழலை மாசடையச் செய்கிறது.அத்துடன், சீன பட்டாசுகளை பயன்படுத்துவது வெடிபொருள் சட்டத்திற்கு எதிரானது. சீன பட்டாசுகளை வாங்குவது உள்நாட்டு தொழில் மற்றும் வணிகத்துறை பாதிக்கும். இதன் காரணமாக, சீன பட்டாசுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.இந்நிலையில், இந்த தீபாவளி பண்டிகைக்கு சீன பட்டாசுகள் விற்பனையை கண்காணித்து, தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னதாகவே மத்திய அரசு சார்பில் சுங்கத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், சுங்கத்துறை ஆணையர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “சீன பட்டாசுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதோ, விற்பதோ, பயன்படுத்துவதோ சுங்கத்துறை சட்டம் 1962ன் கீழ் குற்றம். எனவே, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..