சமூக அக்கறையில் கீழைநியூஸ்… பாராட்டுக்கு உரித்தான மதுரை நிருபர்…

கடந்த 19/10/2019 அன்று மதுரை பசுமலை – மூலக்கரை
ரவுன்டானாவில் வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரும் உயிர்பலி பயத்தை கொடுத்துக்கொண்டிருந்த சிதிலமடைந்த தேசிய நெடுஞ்சாலையை பற்றிய செய்தியை மதுரை நிருபர் காளமேகம் இணையதளத்தில் வெளிச்சம் போட்டு காட்டியிருந்தார்.  அந்த செய்தியின் எதிரொலியாக சிதிலமடைந்த சாலை மீது உடனடியாக நெடுஞ்சாலை துறையும் நடவடிக்கை எடுத்தது.

இது தொடர்பாக அப்பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர் வொளியிட்டுள்ள நன்றி அறிக்கையில்,  சகோதரர், ஊடகவியலாளர், சமூக செயற்பாட்டாளர், மதுரை, திரு. காளமேகம், அவர்களின் துரித செயற்பாட்டால், துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு நெடுஞ்சாலை சரி செய்யப்பட்டு வாகன ஓட்டிகளின் இயல்பான பயணத்திற்கு வித்திட்டுள்ளார். இத்தருணத்தில் அருமை சகோதரருக்கு பேரன்பும், வாழ்த்துக்களும் என தெரிவித்துள்ளார்.

இத்தருணத்தில் உடனடி நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலை துறை, நம் நிருபர் வி.காளமேகம் மற்றும் அவரை ஊக்கப்படுத்தும் சமூக ஆர்வலர்கள் ஆகியோருக்கு கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறது.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..