மத்திய அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்களுக்கு தனித்துவம் வாய்ந்த சிறப்பு அடையாள அட்டை வழங்கும் முகாம்…

மத்திய அரசு மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த சிறப்பு அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் வழி காட்டுதல் படி மாவட்ட முழுவதும் நடத்தி வருகின்றது.இதன் தொடர்சியாக 21/10/2019 காலை பத்து மணி முதல் பகல் இரண்டு மணி வரை திருப்புல்லாணி யூனியனை சேர்ந்த மாற்றுத்திரனாளிகளுக்கு திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தில் நடைபெற்று.

இந்த முகாமில் கீழக்கரை சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தனி வாகனங்கள் மூலம் கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதி பயணாளிகளை இலவசமாக அழைத்து சென்றதோடு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தனர். மக்கள் நல பாதுகாப்புக்கழகம் செயலாளர் முகைதீன் இப்ராகீம், சட்ட விழிப்புணர்வு இயக்கம் பொறுப்பாளர் தாஜீல் அமீன், மஜ்மா-உல்- ஹைராத்தியா கல்வி அறக்கட்டளை தலைவர் நூருல் ஜமான், S D P I அப்துல் காதர், அபுபக்கர் சித்தீக், திருப்புல்லாணி நகர் செயலாளர் முஹம்மது ஹனீபா, அலையன்ஸ் இரத்ததான சேவை ஒருங்கினைப்பாளர் ஹபீப் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டு பயணாளிகளுக்கு உதவி செய்தனர்.

இந்த நிகழ்வின் பொது நலன் கருதி கீழை நியூஸ், சத்திய பாதை மாத இதழ் சார்பாக இந்த முகாம் நடை பெறுவதை துண்டு பிரசுரம் மூலம் தெரியப்படுத்தப்பட்டது குறிப்பிடதக்கது.

கீழக்கரை சமூக ஆர்வலர்ளின் இந்த பணியை இராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல் மற்றும அலுவலர்கள் பாராட்டினார்கள்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image