தீபாவளி சிறப்பு பேருந்துகள்

 தீபாவளி திருநாளை முன்னிட்டு 24.10.2019 முதல் 26.10.2019 வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு  இயக்கப்பட்டு வந்த  பேருந்துகள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சில மாற்றங்களுடன் இயக்கப்படுகிறது.   இதனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திருவண்ணாமலை மண்டல பேருந்து நிலையங்களில் விளம்பர பலகை மூலம் விளம்பரபடுத்தப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு,சென்னையிலிருந்து, திருவண்ணாமலை, வந்தவாசி, போளூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள்,  தாம்பரம் இரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
இதேபோல், சென்னையிலிருந்து,  செய்யாறு,  ஆரணி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள், பூந்தமல்லி தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image