திருவண்ணாமலையில் அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தம்.

திருவண்ணாமலையில் வங்கிகள் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தியாவிலுள்ள வங்கிகளை ஒன்றிணைத்து தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச் செயலாளர் எம். கணபதி தலைமை தாங்கினார். தலைவர் கே. ரவிச்சந்திரன், செயலாளர் ஆர். ஜமாலுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கிகள் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பேங்க் ஆப் பரோடா வங்கி இணைப்பினால் 2000 வங்கிக் கிளைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வேலை பறி போவதை கண்டித்தும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக் கோரி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி ஊழியர்கள் சுமார் 750 பேர் பங்கு கொண்டுள்ளதாக பொதுச் செயலாளர் கணபதி தெரிவித்தார். அனைத்து வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் திருவண்ணாமலையில் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..