Home செய்திகள் ஆரணி அருகே வங்கியில் 1கோடி ரூபாய் கடனை செலுத்த தவறியதால் வீடு மற்றும் மரக்கடைக்கு அதிகாரிகள் சீல்

ஆரணி அருகே வங்கியில் 1கோடி ரூபாய் கடனை செலுத்த தவறியதால் வீடு மற்றும் மரக்கடைக்கு அதிகாரிகள் சீல்

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் பேரூராட்சி பகுதியை சேர்ந்த மரம் இழைப்பகம் கடை உரிமையாளர் செல்வகுமார்(40) இவர் கடந்த 2011ம் ஆண்டு ஆரணி கனரா வங்கியில் தன்னுடைய கடை மற்றும் வீட்டினை அடமானம் வைத்து சுமார் 45லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.தற்போது வட்டியுடன் சேர்த்து 1கோடியே 15லட்சம் ரூபாய் கடன்தொகை நிலுவையில் உள்ளது.. ஆனால் கடன் தவணையை சரியாக செலுத்த வில்லை என்று தெரிகின்றது. . மேலும் இதனால் ஆரணி கனரா வங்கி ஊழியர்கள் செல்வகுமாரை தொடர்பு கொண்டு பலமுறை வற்புறுத்தியும் கடன் தொகையை செலுத்த முன்வரவில்லை இதனால் ( சர்பெக்ஸ் ஆக்ட் ) பிரிவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் வங்கி மேலாளர் மூலமாக புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து கனரா வங்கியில் வாங்கியகடனை செலுத்த தவறிய செல்வகுமாரின் களம்பூர் பஜார் வீதியில் உள்ள கடை மற்றும் வீடு ஆகியவற்றை ஆரணி ஆர்.டி.ஓ.மைதிலி தலைமையில் ( சர்பெக்ஸ் ஆக்ட் ) படி வங்கி ஊழியர்கள் நேரில் சென்று கடை மற்றும் வீட்டிற்கு சீல் வைத்தனர்.அப்போது செல்வகுமாரின் குடும்பத்தினரின் துணிமணிகளை அப்புறபடுத்தியபோது வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட செல்வகுமாரின் தாய் தந்தை ஆகியோர் கதறி அழுதனர். இதனை கண்ட பொதுமக்களின் நெஞ்சை உருக்கிய சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!