கஜா புயல் இழப்பீடு- குறைபாடுகளை களைய வேளாண்துறை முதன்மைச் செயலாளரிடம் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் கஜாபுயல் பாதிப்படைந்து 2018 – 19 நிதி ஆண்டில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் உள்ள குறைபாடுகள் குறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் வேளாண் துறை முதன்மை செயலாளர் உயர்திரு ககன்தீப்சிங்பேடி இ.ஆ.ப அவர்களை நேரில் சந்தித்து எடுத்து கூறினார்.அப்போது அரசு துணை செயலாளர் ரபியுல்லா, தேசிய வேளாண் காப்பீடு நிறுவன சென்னை மண்டல மேலாளர் ராஜேஷ், அலுவலர் சூரியநாராயணன், நியூ இண்டியா அஷ்யூரன்ஸ் சென்னை மண்டல தலைவர் இந்திரா காந்தி ஆகியோர் உடனிருந்தனர். மேலும் இந்த சந்திப்பில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மாநில தலைவர் த.புண்ணியமூர்த்தி நாகை மாவட்ட செயலாளர் எஸ்.இராமதாஸ், நாகை வடக்கு மாவட்ட தலைவர் சீர்காழி வைத்தியநாதன், சென்னை மண்டல தலைவர் வேளச்சேரி குமார், செயலாளர் தி நகர் கோபிநாத் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின்னர் பி.ஆர்.பாண்டியன் சென்னையில் செய்தியாளர்களைசந்தித்துபேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:காவிரி டெல்டா மாவட்டங்களில் 2018-19 காப்பீட்டிற்க்கான இழப்பீடு வழங்குவதில் உள்ள குளறுபடிகளால் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் பாதிப்பு எடுத்துரைக்க வேளாண் துறை முதன்மை செயலாளரிடம் நேரில் எடுத்துக் கூறப்பட்டது.காப்பீட்டு நிறுவனம் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் 562 கிராமங்களில் 428 கிராமங்களுக்கு ரூ 290 கோடி விட்டுவிக்கப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

விடுபட்டுள்ள 134 கிராமங்களுக்கும் மகசூல் இழப்பின்படி இழப்பீடு வழங்க கணக்கீட்டுப் பணி நிறைவுற்றுள்ளது. விரைவில் இழப்பீட்டு தொகை விடுவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.குறைவான இழப்பீடு நிர்ணயம் செய்துள்ள கிராமங்களில் கஜா புயல் பாதிப்பினை கணக்கில் கொண்டு பாதிப்பின் இழப்பீடு குறித்து மறு ஆய்வு செய்யப்பட்டு உரிய இழப்பீடு கிடைப்பதற்கு தமிழக அரசு சார்பில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டத்தில் 16000 ம் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை விடுபட்டுள்ளதாகவும், இரு இடங்களில் காப்பீடு செய்துள்ளது குறித்து கூட்டுறவு வங்கி அதிகாரிகளை ஓரிரு தினங்களில் சென்னைக்கு அழைத்து காப்பீட்டு நிறுவனத்துடன் ஒத்திசைவு கூட்டம் நடத்தப்பட்டு உண்மையான விவசாயிகளுக்கு விரைந்து இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

நாகை மாவட்டத்தில் அறுவடை ஆய்வறிக்கையின் அடிப்படையில் விடுபடாமல் அனைத்து கிராமங்களுக்கும் இழப்பீடு வழங்க படும். தவறு செய்துள்ளவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.2017-18 இழப்பீடு தொகை வழங்கியதில் உள்ள குறைபாடுகள் குறித்து வேளாண் துறை ரீதியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.மேலும் எதிர்வரும் காலங்களில் அறுவடை ஆய்வறிக்கைக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஒப்புதல் பெற வேண்டும்.
புள்ளியியல் துறை மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு இறுதி செய்யும் முன் தமிழக அரசின் அனுமதி பெற்ற பின் இறுதிப்படுத்தப்படுவதை நிர்வாக ரீதியாக உறுதிப்படுத்த வேண்டுமென விவசாயிகள் சார்பில் கேட்டுக் கொண்டோம். அதனை பரிசீலிப்பதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அப்போது செய்தித்தொடர்பாளர் என்.மணிமாறன் உடனிருந்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image