தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது. 17 சவரன் தங்க நகைகள் பறிமுதல்.

உத்தமபாளையம், இராயப்பன்பட்டி, ஓடைப்பட்டி, கம்பம் தெற்கு, PC பட்டி ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் செயின் பறிப்பு மற்றும் திருட்டுகளில் ஈடுபட்டது தொடர்பாக காவல் நிலையங்களில் ஐந்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் DSP சின்னகண்ணு தலைமையில் SI.ஜெயபாண்டி, SI.முனியம்மாள், SSI.ரவி, .மணிகண்டன்,.மாரியப்பன், அழகுதுரை, .பிரபு, சுந்தரபாண்டி ஆகியோர்கள் அடங்கிய தனிப்படையினர் விரைந்து திருட்டில் தொடர்புடைய மாணிக்கம் (26), செல்வராஜ் (31) ஆகிய இருவரையும் கைது செய்து 17 சவரன் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image