தலைவராக யார் வேண்டும்; ஊடகவியலாளர் தீர்மானிக்கணும்..!” – சஜித் பிரேமதாஸ

நாட்டு மக்களுக்கு உண்மைகளைக் கூறத்தக்க, அரசியல்வாதிகளுக்குப் பாடம் கற்பிக்கத்தக்க நிலையிலுள்ள ஊடகவியலாளர்கள், நாட்டின் தலைவராக யாரை தேர்வு செய்வது என்ற சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்” என்று, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.புதிய ஜனநாயக முன்னணி சார்பில் இலங்கை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் சஜித் பிரேமதாஸவிற்கு, ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் ஒன்றியம் ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

அதனை அறிவிக்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று (22ம் தேதி) நடைபெற்றது. இதில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பேசுகையில், “வென்றெடுத்த ஜனநாயகத்தை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில், ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் ஒன்றியம் எனக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.ஊடகவியலாளர்களின் கைகளில் தற்போது முக்கியமான ஒரு பொறுப்பு உள்ளது. கடந்த காலத்தில், நானும் எனது பிரதிநிதிகளும் ஊடகங்களை எவ்வாறு கையாண்டோம் என்பதை சீர்தூக்கி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

என்னுடைய அரசியல் பயணத்தில் ஹிட்லர், இடிஅமீன், ராபர்ட் முகாபே ஆகியோரை பின்பற்றி, அவர்களைப் போல உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் எப்போதும் பயணித்ததில்லை. நாட்டு மக்களுக்கு உண்மைகளைக் கூறும், அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்பிக்கும் நிலையில் உள்ள ஊடகவியலாளர்கள், நாட்டின் தலைவராக யாரை தேர்வு செய்வது என்ற சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். நாட்டில், ஏகாதிபத்திய ராணுவ ஆட்சியையா அல்லது சுதந்திரமான சிவில் ஜனநாயக ஆட்சியையா உருவாக்குவது என்ற முடிவை எடுக்கவேண்டிய தருணம் இதுவாகும்” என்று தெரிவித்தார்.

– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image