இராமநாதபுரம் அருகே சீமை கருவேல் மரக்கன்றுகள் அகற்றும் பணி தொடக்கம்

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சீமைக்கருவேல் மரங்கள் பல்லாயிரக்கணக்கான எக்டேர் நிலங்களில் மண்டி படர்ந்துள்ளன. சாயல்கு, கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், நயினார் கோவில் உள்ளிட்ட ஒன்றியங்களில் கரிமூட்டம் தொழிலில் சீமை கருவேல் மரங்கள் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன, இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் பெரிதும் பாதித்தது. இதன் வீபரீதம் உணர்ந்து பொது நல வழக்கு அடிப்படையில் சீமை கருவேல் மரங்களை முற்றிலும் அகற்ற ராமநாதபுரம் உள்பட 13 மாவட்ட ஆட்சித் தலைவர் களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது. இதன்படி சீமை கருவேல் மரக்கன்றுகளை அப்புறப்படுத்தும் பணியில் பல்வேறு சமூக நல அமைப்புகள், பள்ளி, கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் ஈடுபட்டனர். உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் அகற்றும் பணி நடந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மண்டிக் கிடக்கும் சீமை கருவேல் மரக்கன்றுகளை அகற்ற தமிழர் பூமி இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் அனுமதி கோரப்பட்டது. அவரது அனுமதியின்படி முதற்கட்டமாக இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் இளமனூர் ஊராட்சி பழங்குளம் கிராமத்தில் சீமை கருவேல் மரக்கன்றுகள் அகற்றும் பணியை இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நந்திகா தொடங்கி வைத்தார். பேராவூர் ஊராட்சி செயலர் ஆனந்தி, தமிழர் பூமி இயக்க நிறுவனர் விக்னேஷ்வரன், நிர்வாகிகள் முத்துக்குமார், ராஜா, கார்த்திக், சேகர், பாபு அம்பேத், அமல் பிரகாஷ், தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image