Home செய்திகள் பள்ளிகளுக்கு இடையேயான மாநில கபடி போட்டி. இராமேஸ்வரம் பள்ளி முதல் முறையாக தகுதி

பள்ளிகளுக்கு இடையேயான மாநில கபடி போட்டி. இராமேஸ்வரம் பள்ளி முதல் முறையாக தகுதி

by mohan

இராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான மாவட்ட அளவிலான தடகளம், குழு விளையாட்டு போட்டிகள் தொண்டி இஸ்லாமிக் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இங்கு நடந்த 17 வயதினருக்கான கபடி போட்டியில், கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி , சின்ன கீரமங்கலம் புனித பிரான்சிஸ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களை இராமேஸ்வரம் வேர்க்கோடு புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று நவம்பரில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

மாநில போட்டிக்கு முதல்முறையாக தகுதிபெற்ற வேர்க்கோடு புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி (கபடி) மாணவர்கள், நன்கு பயிற்சி அளித்த பள்ளி உடற்கல்வி விளையாட்டு ஆசிரியர் ஜெரோம் வில்லியம் ஜெயக்குமார் ஆகியோரை முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மண்டபம் கல்வி மாவட்ட அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி,வேர்க்கோடு புனித சூசையப்பர் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி தாளாளர் தேவசகாயம், முதல்வர் சூசை ரத்தினம், தொண்டி இஸ்லாமிக் மெட்ரிக்., பள்ளி முதல்வர் பூபதி, உடற்கல்வி இயக்குநர்கள் சசிகுமார், அன்சாரி உடற்கல்வி ஆசிரியர்கள் எம்.ரமேஷ், ராஜா, சந்திரசேகர், வின்சென்ட் சேவியர், முனியசாமி, சேவியர், பெனடிக்ட், காயத்ரி, சுகிர்தம், ரமேஷ், பூமிநாதன், மீனாட்சி சுந்தரம், குமார், பாண்டியன், ரத்தினசாமி மற்றும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!