பாலக்கோடு அருகே மூன்று மாதங்களாக ஒகோனக்கல் குடிநீர் நிறுத்தம் போராட்டம் நடத்த போவதாக கிராம மக்கள் எச்சரிக்கை

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட கம்மாளப்பட்டி ஊராட்சி K. செட்டிஹள்ளி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசதித்து வருகின்றனர். கிராமத்தில் ஒரு மேல்நிலை நீர்தேக்க தொட்டியும், ஒரு ஆழ்துளை கிணறும் உள்ளது. இதில் ஆழ்துளை கிணறுகளில் மின்மோட்டர் பழுதாகி காட்சி பொருளாக உள்ளது.ஒகேனக்கல் குடிநீர் கடந்த மூன்று மாதங்களாக வராததால் குடிநீர்தேவையை பூர்த்தி செய்ய 2கி.மீ தூரம் நடந்து சென்று ஒகேனக்கல் பிரதான குழாயிலிருந்து வரும் கசிவு நீரை பிடித்து வருவதாகவும், இதனால் பள்ளி, கல்லூரி  செல்லும் மாணவ மாணவிகள் சிரமம் அடைவந்து வருகின்றனர். மேலும் விவசாய கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் வறண்டதால் ஆடு, மாடுகளுக்கு மட்டுமின்றி அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீரியின்றி தவித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
குடிநீர் பற்றாக்குறை குறித்து பலமுறை ஊராட்சி செயலாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், நேரடியாக அதிகாரிகளை சந்தித்து முறையிட்டால் அலச்சிய போக்கினை கடைப்பிடித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராமபொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  எனவே மாவட்ட நிர்வாகம் குடிநீர் தட்டுபாட்டை போக்க ஒகேனக்கல் குடிநீரை முறையாக வழங்கவும், பழுதான மின்மோட்டாரை சரிசெய்து குடிநீர் வழங்க வேண்டும் இல்லையன்றால் மாபெரும் போராட்டம் நடத்த போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..