தென்காசியில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல்

தென்காசியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த சுமார் 15 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் விக்ரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்க நெல்லை மாவட்டத்தில் மூன்று நாட்களாக அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தென்காசி வாய்க்கால் பாலம் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக தென்காசி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து காவல் துறையினர் அந்த பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மனோ என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 15 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 150 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..