வேலம்மாள் மருத்துவமனை சார்பில் ராமநாதபுரத்தில் 483 பேருக்கு இலவச சிகிச்சை

வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் இராமநாதபுரத்தில் நடந்த இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மருத்துவமனை தலைமை செயலதிகாரி என்.வெங்கட் ஃபணிதர் தொடங்கி வைத்தார். இருதயம், ஜீரண மண்டலம், நுரையீரல், நரம்பியல், எலும்பு மற்றும் மூட்டு, சிறுநீரகம், பொது அறுவை சிகிச்சை, பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, மனநலம், தோல், மகளிர் நலம் மற்றும் மகப்பேறு, குழந்தைகள் நலம் தொடர்பான குறைபாடுகளுக்கு 38 டாக்டர்கள் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாமில் பங்கேற்ற பெண்கள், ஆண்கள், பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் என 483 பேருக்கு ரத்த அழுத்தம், ஈசிஜி, செவித்திறன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ரத்த பரிசோதனை, இதய துடிப்பு, கண் பரிசோதனை, எக்ஸ்ரே, சுவாசக் கோளாறு சோதனை செய்யப்பட்டு இலவச மருத்துவ ஆலோசனை அளித்து மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது.

மருத்துவமனை செயல் அதிகாரி என்.வெங்கட் ஃபணிதர் கூறுகையில், வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் தென் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதன்படி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்த முதல் மருத்துவ முகாமில் 1,200க்கும் மேற்பட்டோருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் நடந்த 2வது சிறப்பு மருத்துவ முகாமில் 30க்கும் மேற்பட்ட டாக்டர்கள், டெக்னீஷியன்கள், செவிலியர்கள் என நூறு பேர் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர். ரத்த அழுத்தம், செவித் திறன், கண் உள்பட 13 விதமான ஆரோக்கிய குறைபாடு தொடர்பாக பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு, ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான மருந்து, மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது.

மருத்துவமனை சேர்மன் எம்.வி.முத்துராமலிங்கம் தொலைநோக்கு பார்வை படி குறைந்த செலவில் உயர் தர சிகிக்சை அளித்து பிணி நீக்கும் பணியை  பொதுமக்களுக்கு வழங்கி வருகிறோம்.வரும் காலங்களில் தென் மாநிலத்தில் இதர மாவட்டங்களில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று பயன் பெறலாம் என்றார். மருத்துவமனை மார்க்கெட்டிங் மேலாளர்கள் கோபாலகிருஷ்ணன், தாமஸ் லாரன்ஸ், ரோட்டரி உதவி ஆளுநர் நானா (எ) நாகரத்தினம், மாவட்ட தலைமை ரஜினி காந்த் ரசிகர் மன்ற மாவட்ட முன்னாள் செயலர் ராமச்சந்திர பாபு ஆகியோர் உடனிருந்தனர்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image