நாங்குநேரி தொகுதியில் அமைக்கப்பட்ட அதிமுக பந்தல் சரிந்தது – அதிமுக வாக்கு வங்கி சரிவதற்குறிய அறிகுறியா?

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் 19.10.19 சனிக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பெய்த மழையில் அதிமுக தோ்தல் அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த பந்தல் திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாங்குநேரி பகுதியில் சனிக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் வாகனங்கள் சாலையில் செல்லமுடியாத அளவிற்கு சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. போக்குவரத்து ஆங்காங்கே சிறிது நேரம் தடைபட்டது.

இந்நிலையில் நாங்குனேரி சுங்கச்சாவடி அருகே உள்ள அதிமுக தோ்தல் அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த ராட்சத பந்தல் திடீரென சரிந்து கீழே விழுந்தது.பந்தலுக்குள் ஒரு சிலா் மட்டுமே இருந்ததால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து சரிந்த பந்தல் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது.அதிமுகவின் பந்தல் சரிந்ததையொட்டி அதிமுகவின் வாக்கு வங்கியும் சரிவதற்கு இது ஒரு அறிகுறியாய் இருக்கலாம் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்காக நாங்குநேரி வந்துள்ள அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறியிருந்தார்.இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இந்நிலையில் அதிமுகவின் வாக்குவங்கி சரிந்து விழும் அபாய நிலையை நோக்கி நகர்வதாக அப்பகுதி மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

நாங்குநேரியை கைப்பற்றுமா அதிமுக?

செய்தியாளர்   அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..