மதுரை பைபாஸ் சாலையில் ஷேர் ஆட்டோக்கள் அட்டகாசம்.

மதுரை பைபாஸ் சாலையில் தினமும் சுமார் 200க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் அங்குமிங்குமாய் அலைகிறது. நினைத்த இடத்தில் நிற்பதும் பின்னால் யார் வருவது என்று பார்ப்பதும் கிடையாது .முன்னாள் யார் சென்றாலும் கொண்டு இடித்து நிப்பாட்டுவது என தினசரி நிகழ்வாகவே நடந்து வருகிறது .இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது மோதி சிலர் படு காயம் அடைகிறார்கள். மதுரை பைபாஸ் சாலை பழைய கருப்புசாமி கோவில் அருகே ஆட்டோ ஒன்று வேகமாக குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த குழந்தைகளுடன் கணவன்-மனைவி  மீது மோதியது.   இதில் இரு சக்கர வாகனத்தில் இரண்டு குழந்தைகளும் அவரது மனைவிக்கும் காயங்கள் ஏற்பட்டது.  மேலும் கணக்கில்லாமல் ஆட்டோக்களில் ஆட்களை ஏற்றி செல்வதும் ஆட்டோக்கள் திடீர் என கவிழ்வதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. காவல்துறை இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் அபராதம் மட்டும் விதிக்காமல் ஆட்டோக்களை பறிமுதல் செய்து மீண்டும் அவர்களிடம் கொடுக்காமல் உரிய நடவடிக்கை எடுப்பார் என பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..