மக்கள் பாதை தாய்மண் திட்டம் சார்பாக மாபெரும் பனை விதை விதைப்பு திருவிழா

மேதகு. ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் ஐயாவின் 88 வது பிறந்தநாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலம் ஒன்றியத்தில் மக்கள் பாதை தாய்மண் திட்டம் சார்பாக மாபெரும் பனை விதை விதைப்பு திருவிழா நடைபெற்றது.இராஜசிங்கமங்கலம்சந்தூரணியை சுற்றிலும் பனை விதைகள் விதைக்கப்பட்டன.இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் தலைமை தாங்கி பனை விதை விதைப்பு திருவிழாவை தொடங்கி வைத்தார்.

இராஜசிங்கமங்கலம ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினர்களாக தீபம் இந்தியா அறக்கட்டளை நிறுவனர் மதிவாணன், சமூக ஆர்வலர்கள் சவுதி அயூப்கான் , இம்தாத், அஸ்மான், கபார் கான், அர்சாத் ஆகியோர் கலந்து கொண்டு பனை விதைகளை விதைத்தனர்.இதேபோல் சோழந்தூர் ஊரணியைச் சுற்றிலும் பனை விதைகள் விதைக்கப்பட்டன. சமூக ஆர்வலர் முகம்மது முபசீர் அவர்களின் ஒருங்கிணைப்பில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் பனை சார்ந்த விழிப்புணர்வை இளைஞர்களிடம் எடுத்து கூறினார்.இராஜசிங்கமங்கலம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் கலந்து கொண்டு இயற்கை வேளாண்மை பற்றி எடுத்துரைத்தார். உதவி தோட்டக்கலை அலுவலர்கள் இளையராஜா, பாலமுரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..