பணத்தை சேமிப்பது போல் மழை நீரை சேமிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வேண்டுகோள்..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் விண்ணவனூர் கிராமத்தில் விண்ணவனூர் கிராம நல சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா, ரத்ததான முகாம்,அரசு பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட இயந்திரம் வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.மொத்தம் ரூ 5 லட்சம் செலவில் நடைபெற்ற இத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி துவக்கி வைத்தார். இந்த விழாவிற்கு வந்தவர்களை ஜனாதிபதி விருது பெற்ற நல்லாசிரியை டாக்டர் ராஜம்மாள் வரவேற்றார்.முப்பெரும் விழாவை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது,நமது வாழ்க்கை ஆரோக்கியமாகவும் தரமானதாகவும் இருக்கவேண்டும் என்பதை முடிவுசெய்வது இயற்கையாகும். இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த சீதோசன நிலை இப்போது இல்லை. பூமி சூடாகி உள்ளது. சூரியனை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு ஒரே தீர்வு பூமியை குளிர்விக்க வேண்டும். இதற்கு மரங்களை நட வேண்டும்.1 லிட்டர் தண்ணீரை சுத்திகரிப்பதனால் 40 சதவீதம் தண்ணீர் வீணாகுகிறது. சுத்திகரிப்பு நிறுவனங்களால் தண்ணீரை உற்பத்தி செய்ய முடியாது என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் .நாம் நமக்காக வாழாமல் கம்பெனிகளை வாழ வைத்துக் கொண்டிருக்கிறோம். தண்ணீர் பிரச்சினைக்காக காலி குடங்களுடன் சாலை மறியல் செய்கிறீர்கள். அரசு மட்டும் எப்படி தண்ணீரை தர முடியும்? பக்கத்து கிராமத்திலிருந்து தண்ணீரை எடுத்து வந்தால் அந்த கிராம மக்கள் விட்டு விடுவார்களா? எனவே தண்ணீரை சேமிப்பது முக்கியம். வங்கியில் எப்படி பணத்தை சேமிக்கிறோமோ அதே போல் வீடுகள் தோறும் மழை நீரை சேமிக்க வேண்டும்.இதில் உங்கள் பங்களிப்பு இல்லை என்றால் இயற்கை, குடும்பம், நாட்டுக்கு பாரமாகி விடுவோம் என்பதை உணர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முடிவில் விண்ணவனூர் கிராம நல சங்க நிறுவனர் கே. பாஸ்கரன் நன்றி கூறினார். விழாவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..