மாநில தகவல் ஆணையத்திற்கு வரப்பெற்ற மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை 25 மனுக்களுக்கு தீர்வு

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாநில
தகவல் ஆணையர் சு.முத்துராஜ் தலைமையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகார் மனுக்கள் தொடர்பான விசாரணை நடைபெற்றது.மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் தலைமையில் ராமநாதபுரம்  மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அலுவலகங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் கோரிய தகவல்களில், சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் வழங்காத தகவல்களை தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்த மனுதாரர்களுக்கு தகவல் வழங்குவது தொடர்பாக நடத்தப்பட்ட வழக்கு விசாரணையில் ஆணையம் மூலம் உடனடி தீர்வு காணப்பட்டது.இதில் நகராட்சி, பேரூராட்சி, குடிநீர் வழங்கல் துறை, பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறை சம்பந்தப்பட்ட தகவல் கோரி வரப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் 25 மனுக்களுக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் சு.முத்துராஜ்
தலைமையில் உடனடித் தீர்வு காணப்பட்டது.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..