தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பணி

இராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைப் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் தூய்மை சேவை இயக்கம் திட்டத்தின் கீழ் நெகிழி ஒழிப்பு இயக்கம் விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டு சுற்றுப்புறத் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) மா.பிரதீப் குமார், மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய மேலாண்மைக்குழு உறுப்பினர் கே.முரளிதரன் ஆகியோர் உடனிருந்தனர்.மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:பாரத பிரதமர் இந்திய அளவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஊரகப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மேம்பாடு, சுகாதார மேம்பாடு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக தூய்மையே சேவை விழிப்புணர்வு நடவடிக்கைகளை துவக்கி வைத்தார். அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் சுற்றுப்புற சுகாதார மேம்பாடு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தமிழக முதல்வரின் உத்தரவின்படி, தமிழகத்தில் 01.01.2019 முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் இராமநாதபுரம் மாவடடத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலமாகவும், பழமை வாய்ந்த புனிதத்தலமாகவும் இராமேஸ்வரம் விளங்குகின்றது. ஆண்டுதோறும் சராசரியாக ஒரு கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.

அதனடிப்படையில், இராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார கடற்கரைப் பகுதியை தூய்மையாக பராமரிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தனுஷ்கோடி கடற்கரைப் பகுதியில் தூய்மை சேவை இயக்கம் திட்டத்தின் கீழ் நெகிழி ஒழிப்பு இயக்கம் விழிப்புணர்வு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தனுஷ்கோடி கடற்கரைப் பகுதியில் தொடர்ந்து தூய்மைப் பணிகளை மேற்கொள்ள இராமேஸ்வரம் நகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்வில், இராமேஸ்வரம் நகராட்சி அலுவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையம் சார்ந்த பணியாளர்கள், புகைப்படச் சங்க பிரதிநிதிகள், தனுஷ்கோடி பகுதியில் உள்ள வியாபாரிகள் தன்னார்வமாக கலந்து கொண்டனர்.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image