குண்டும் குழியுமான சாலையால் குலுங்கும் பேருந்துகள்.. சீரமைப்பு செய்யுமா நிர்வாகம்.!

நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகா உபதலை பஞ்சாயத்து உட்பட்ட. பாய்ஸ்கம்பெனி. உபதலை செல்லும் சாலை குண்டும் குழியுமாக சரி செய்யபடாமல் உள்ளன.  மாலை அந்த வழியாக வந்த மினி பேருந்து அந்த மோசமான சாலை குழியில் மாட்டி கொண்டது. அதிர்ஷட வசமாக விபத்து ஏற்படவில்லை. பலபுகார்கள் அளித்தும் இந்த சாலையினை சரி செய்ய உபதலை பஞ்சாயத்து நடவடிக்கை எடுக்கவில்லை? இன்று மினி பேருந்து இதே போல் பள்ளி வாகனங்கள் என பல வாகனங்கள் செல்கின்றன. இந்த பகுதியில் அரசு பேருந்துகள் செல்லாத நிலையில் மினி பேருந்துகள் ஏழை மக்களுக்கு போக்குவரத்து சேவை வழங்குகின்றன. மழை காலங்களில் இதை விட மோசமான நிலைமை.பயணிகள் பொதுமக்களின் உயிரினை கருத்தில் கொண்டு பல காலமாக சரி செய்யபடாமல் இருக்கும் இந்தசாலையினை சரி செய்ய நீலகிரி மாவட்ட. ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

நீலகிரி மாவட்ட. நிருபர் ரமேஷ்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..