மாற்றுத்திறனாளிகள் செல்ல ஏதுவாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைப்பது குறித்த TARATDAC-யின் தொடர் கோரிக்கை வெற்றி

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள வங்கிகள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வந்து செல்ல வசதியாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைத்து தர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அந்த கோரிக்கையை ஏற்று பழனி தாலுகா நெயக்காரபட்டியில் உள்ள SBI வங்கியில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

TATADDAC-யின் கோரிக்கையை ஏற்று சாய்வுதளம் அமைத்து கொடுத்த நெய்க்காரப்பட்டி வங்கி மேலாளருக்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், பழனி ஒன்றியக்குழு சார்பில் ஈஸ்வரன் – ஒன்றிய தலைவர் மணிகண்டன் – ஒன்றிய செயலாளர் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image