பளுதூக்கும் போட்டியில் சாதனை; வவுனியா மாணவிக்கு பாராட்டு..!

தேசிய அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில், 108 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்த வவுனியா மாணவிக்கு பாராட்டுவிழா நடந்தது. இலங்கை வவுனியாவில் உள்ள சைவபிரகாசா மகளிர் கல்லூரியில் பயின்றுவரும் மாணவி நிரஞ்சன் துஸ்மிதாயினி.இவர், தேசிய அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் இருபது வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டு, 108 கிலோ அளவிலான எடையை தூக்கி முதலிடம் பெற்றார்.

இதன்மூலம், கல்லூரிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள மாணவி நிரஞ்சன் துஸ்மிதாயினிக்கு, வவுனியா சைவபிரகாசா மகளிர் கல்லூரியில் பாராட்டுவிழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் அதிபர் பாக்கியநாதன் கமலேஸ்வரி தலைமை வகித்து, மாணவி நிரஞ்சன் துஸ்மிதாயினிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மாணவியை பாராட்டினர்.

– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image