கடும் நிதிநெருக்கடி எதிரொலி – ஐ.நா.சபை மூடலா?

கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம் வார இறுதி நாட்களில் மூடப்பட்டுள்ளது.சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நிதிப் பிரச்சினை காரணமாக அலுவலகம் இயங்காது எனவும் ஐ.நா.சபையின் டிவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 193 நாடுகளைக் கொண்டிருக்கும் ஐ.நா.பொதுச்சபையில் 131 நாடுகளில் இந்தியா உள்பட 35 நாடுகள் மட்டுமே முழுமையாக செலுத்த வேண்டிய தொகையை செலுத்தியுள்ளன. இதர நாடுகள் முழுத்தொகையை செலுத்தவில்லை. இதனால் ஐ.நா.சபைக்கு கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாத அளவிற்கு ஐ.நா.சபை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் வார இறுதி நாட்களில் அலுவலகம் செயல்படாது என ஐ.நா தெரிவித்துள்ளது.இந்த நிதி நெருக்கடி நிலை தொடர்ந்தால் வார இறுதி நாட்களில் மூடப்பட்டுள்ள ஐ.நா.சபை நிரந்தரமாக மூடப்படும் நிலைக்கு தள்ளப்படலாம்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image