கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முன்னேற்பாடுகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.பக்தர்களின் வசதிக்காக 2500 பேருந்துகள் விடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.கிரிவலப் பாதையை சுற்றி 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படும்.பக்தர்களுக்கு கொடுக்கப்படும் பாஸ் பார்கோட் போட்டு வழங்கப்படும்.இவ்வாறு இந்த ஆலோசனையில் இறுதியில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..