உச்சிப்புளியில் தமாகா இராமநாதபுரம் (கிழக்கு) மாவட்ட ஆலோசனை கூட்டம்

இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமாகா., வட்டார, நகர், பேரூராட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உச்சிப்புளியில் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் தலைமை வகித்தார். சேவா தள முன்னாள் மாவட்ட தலைவர் தினேஷ்பாபு,இளைஞரணி மாவட்ட தலைவர் முகேஷ் குமார் , மதுரை மாவட்ட துணை தலைவர் ராமநாதன் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நிர்வாகிகள் பேசினர்.மேலிட பார்வையாளர், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.எஸ்.கே.ராஜேந்திரன் பேசியதாவது:

எடுத்த முடிவில் இறுதிவரை உறுதியாக இருக்க வேண்டும். எந்த ஒரு இயக்கமானாலும் ஒரே நிலைப்பாட்டுடன் செயல்பட்டால் உரிய அங்கீகாரம் கிடைக்கும். நாம் சார்ந்துள்ள இயக்கத்தை மக்கள் சேவை மூலம் வலுப்படுத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக., தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமாகா தொகுதி பங்கீட்டில் கேட்டு பெறும் தொகுதிகளில் வெற்றி பெற வியூகம் அமைத்து வெல்ல வேண்டும் என்றார்.இராமநாதபுரம் சேவா தள முன்னாள் மாவட்ட தலைவர் தினேஷ் பாபு பேசுகையில்,தேர்தல் வெற்றிகள் மூலமே கட்சி வளர்ச்சி அடையும். வெற்றி வாய்ப்புள்ள உள்ளாட்சி தொகுதிகளில் போட்டியிட கட்சி நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.மாநில செயலாளர் டி.ராஜாங்கம் பேசியதாவது:

உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் என்பது கட்சி வளர்ச்சிக்கு அடிப்படை வெற்றி வாய்ப்புள்ள உள்ளாட்சி அமைப்புகளில் தகுதி வாய்ந்த மக்கள் செல்வாக்குள்ள நிர்வாகிகள் போட்டியிட விரும்புவோர் மனு அளிக்கலாம். இதனடிப்படையில் தான் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச முடியும். உள்ளாட்சி தேர்தலில் சைக்கிள் சின்னத்தை பெற்று போட்டியிட சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்திற்கு பின் கட்சி நிர்வாகிகளுடன் தலைவர் வாசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றார்.

மாவட்ட துணை தலைவர்கள் பி. என் கணேசன், மோகனதாஸ், மாவட்ட செயலர்கள் ராஜதுரை, கே.சி.தர்மராஜ், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், ராமநாதபுரம் வட்டாரத் தலைவர் ஆறுமுகம், மண்டபம் கிழக்கு வட்டாரத் தலைவர் சுரேஷ்,ஆர்.எஸ்.மங்கலம் தெற்கு வட்டாரத் தலைவர் ஸ்டாலின்,திருவாடானை தெற்கு வட்டாரத் தலைவர் மதன்குமார், திருவாடானை வடக்கு வட்டாரத்தலைவர் அப்பாவு,ராமேஸ்வரம் நகர் தலைவர் ராமகிருஷ்ணன், ராமநாதபுரம் நகர் தலைவர் ராஜேஸ்வரன், தொண்டி நகர் தலைவர் தமிழ்ச்செல்வன், ஆர்எஸ் மங்கலம் நகர் தலைவர் செல்வராஜ், உச்சிப்புளி நகர் தலைவர் பட்டாணி, மாவட்ட விவசாய பிரிவு சத்தீஸ்வரன், பெருங்குளம் விஸ்வநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.மண்டபம் மேற்கு வட்டாரத் தலைவர் ராஜேஸ்வரன், நன்றி கூறினார். மாற்று கட்சிகளைச் சேந்த பலர் தமாகாவில் இணைந்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..