துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை சரி செய்யக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்.!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா ஒக்க நாடு மேலையூர் கிராமத்தில் யாதவர் தெரு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனை இதுநாள் வரை சீர்படுத்தி மின் இணைப்புதர வலியுறுத்தியும், ஒரு வருட காலமாக இருட்டிலேயே வாழ்ந்து வரும் விவசாயக் குடும்பங்களுக்கு வெளிச்சம் கேட்டு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் எம்.மணி தலைமையில் ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைசார்ந்த விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் தற்போது (18.10.2019) ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பி.எஸ்.வீரப்பன். ஒரத்தநாடு ஒன்றிய தலைவர் மகேஷ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தஞ்சாவூர் செய்தியாளர், லியோ யாக்கோப்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..