நீலகிரி மாவட்டம் குன்னூரில் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி.!

நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், நகராட்சி மண்டல இயக்குனர் திருப்பூர் அவர்கள் அறிவுரையின் பேரில், குன்னூர் நகராட்சி பொது சுகாதாரதுறையினரின் பிரிவின் சார்பாக சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளிமggற்றும், CSI நடுநிலை பள்ளிகளில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் பொருட்டு நிலவேம்பு கஷாயம் 200க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் குன்னூர் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் திரு.மால்முருகன் திரு.செல்வராஜ் நகராட்சி மேற்பார்வையாளர் திரு.முருகானந்தம் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் டெங்கு காய்ச்சல் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகள் நலமாக வாழ வேண்டும் என்று அக்கறை கொண்ட நீலகிரி மாவட்ட. ஆட்சியர் அவர்களுக்கும் குன்னூர் நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் ஊழியர்கள் அனைவருக்கும் குன்னூர் பகுதி பொதுமக்களின் சார்பாகவும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களின் சார்பாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்ட நிருபர் ரமேஷ்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..