ஆபத்தான நிலையில் தண்ணீர் நிறைந்து காணப்படும் இரயில் சுரங்கப்பாதை..

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா ஆழ்வார்குறிச்சி அருகில் செங்கானூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு ரயில் பாதை அமைந்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருதி ரயில் பாதைக்கு மேல் இருந்த வழியை அடைத்து மூடி விட்டு ரயில் பாதைக்கு கீழ் சுரங்க வழியை அரசு அமைத்துள்ளது. இந்த சுரங்க பாதை வழியாகவே பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் சென்றுவருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நெல்லை மாவட்டத்தில் மழை அதிகமாக பெய்து வருவதன் காரணமாக அருகிலுள்ள ஏரி,குளங்கள் நிறைந்து இந்த சுரங்க பாதை முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. வேறு எந்த ஒரு மாற்று பாதையும் இல்லாத நிலையில் இந்த சுரங்கபாதையின் வழியாகவே கடந்து செல்லும் மிகவும் ஆபத்தான நிலை உள்ளது.

பள்ளிக்கூடம், மருத்துவமனை, பொதுமக்களின் அன்றாட பணிகள் ஆகியவைகளுக்கு செல்ல வேண்டிய நிர்பந்த நிலையில் பொதுமக்கள் உள்ளனர். மேலும் அவசர சூழ்நிலையில் கூட செல்ல முடியாத அளவிற்கு இந்த பாதை முழுவதும் தண்ணீர் நிறைந்து குளம் போன்று காட்சியளிக்கிறது. தற்போது தண்ணீரில் இறங்கி சுரங்கப்பாதை வழியாகவே பொதுமக்கள்,மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர்.

ஆபத்துகள் நிறைந்த இந்த நிலையை மாற்றத்தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசாங்கம்,மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் விரைந்து எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..