உசிலம்பட்டி அருகே வகுரணி அரசு பள்ளி முன்பு தேங்கியுள்ள மழைநீரால் டெங்கு பரவும் அபாயம். மாணவர்கள் வேதனை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வகுரணி கிராமத்தில் அரசு கள்ளர் உயர்நிலைபள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிகள் உள்ளது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1வாரமாக பெய்த மழையின் காரணமாக பள்ளி வளாகம் மற்றும் நுழைவுவாயிலில் மழைநீர் தேங்கியுள்ளதால் பள்ளிசெல்லும் மாணவர்கள் மழைநீரில் நடந்துசெல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால் டெங்கு பரவும் அபாயம் உள்ளதாக கிராமமக்கள் தெரிவித்தனர். மேலும் தேங்கியுள்ள மழைநீரால் டெங்கு கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி வருவதாகவும், டெங்கு கொசுக்கள் பகலிலும் கடிப்பதால் வகுப்பறையில் பாடங்கள் கற்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் வேதனை தெரிவித்தனர். இது குறித்து கடந்த ஒருவாரங்களாக அதிகாரிகளிடம் சரிசெய்யகோரி கோரிக்கை விடுத்தும்; இதுவரைசரிசெய்யாமல் மெத்தனப்போக்காக செயல்படுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.அரசு மழை நீரைக்கடத்தி டெங்கு அபாயத்திலிருந்து பள்ளிக்குழந்தைகளை காக்க வேண்டுமென கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..