ஏர்வாடி, தொண்டி 108 ஆம்புலன்ஸ்களில் பிறந்த குழந்தைகள்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சுரேஷ் மனைவி ராகவி 22 , பிரசவத்திற்காக தொண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இன்று 17.10.19 அதிகாலை ஒரு மணி அளவில் மிகுந்த வலி ஏற்பட்டது. அங்கு பிரசவம் பார்க்க வசதி இல்லை என அப் பெண்ணின் உறவினர்களிடம் செவிலியர் எடுத்துக் கூறினார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ மருத்துவமனைக்கு ராகவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். வழியில் பிரசவ வலி அதிகரித்த ராகவிக்கு ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர் பழனிகுமார் , ஒட்டுநர் ஜெய்கிருஷ்ணன் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்டு தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

சாயல்குடி அருகே கிடாத்திருக்கையைச் சேர்ந்த முருகன் மனைவி
மாரியம்மாள் 22 ,அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அக். மாலை 5:05 மணியளவில் பிரசவ வலி அதிகரித்தது. அங்கு பிரசவம் பார்க்க போதிய வசதியின்மையால் அப் பெண் உடன் இருந்த உறவினர்களிடம் செவிலியர் எடுத்துக் கூறினார். இதையடுத்து மாரியம்மாளை மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். வழியில் அப்பெண்ணிற்கு வலி மிகுதியானதால் அப்பெண்ணிற்கு ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர் முத்துமணி, ஒட்டுநர் மைந்தராஜ் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்டு தாயும் சேயும் நலமாக உள்ளனர். தொண்டி 108 ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image