மண்டபம் அருகே பைக் மீது கூரியர் வாகனம் மோதி இலங்கை அகதி பலி

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாம் ஈழ ஏதிலியர் அமைப்பு நிர்வாகி மதிவதனன். இவரது மகன் ரவிகாந்த், 46. இவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் இலங்கையில் வசிக்கின்றனர். வெளிப்பதிவில் தங்கியிருந்த ரவிகாந்த், ராமநாதபுரத்தில் உள்ள ஸ்டூடியோவில் போட்டோ வடிவமைப்பாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இலங்கை செல்ல விண்ணப்பித்திருந்த ரவி காந்த் மனு தொடர்பாக சான்றிதழ் சரி பார்க்க மண்டபம் முகாம் அகதிகள் மறுவாழ்வு அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் இன்று காலை 17.10.19 வந்தார். மண்டபம் முகாம் மரைக்காயர்பட்டினம் அருகே வந்தபோது தபால் ஏற்றி வந்த கூரியர் நிறுவன வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் இருந்து ரவி காந்த் நிலை தடுமாறி விழுந்து படுகாயமடைந்தார். ஆம்புலன்சில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் ரவி காந்த் உயிரிழந்தார் . இது குறித்து மண்டபம் போலீஸ் எஸ்.ஐ., ராமகிருஷ்ணன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image