திருவண்ணாமலையில் உலக திரைப்பட விழா.. மாவட்ட ஆட்சியர் கந்தசாமி துவக்கி வைத்தார்…

திருவண்ணாமலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், உலக திரைப்பட விழா துவக்க நிகழ்ச்சி  நடைபெற்றது. திருவண்ணாமலை அருணாச்சலம் திரையரங்கில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில், துவக்க நிகழ்ச்சியாக, திரைத்துறை கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடக்க விழாவிற்கு தமுஎகச கௌரவத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார், வரவேற்பு குழு தலைவர் எஸ் .குழந்தைவேலு வரவேற்றார், ஒருங்கிணைப்பாளர் களப்பிரன் விழா நோக்க உரையாற்றினார், விழாவை தொடங்கி வைத்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு. கந்தசாமி சிறப்புரையாற்றினார்.

திரைப்பட இயக்குனர் கோபி நயினார், திரைக் கலைஞர் ஷீலா, திரைத் துறை பேராசிரியர் எம்.சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமுஎகச மாவட்ட செயலாளர் மு.பாலாஜி நன்றி கூறினார் மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ். கருணா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கும்பளாங்கி நைட்ஸ் என்ற மலையாள படம் முதல் படமாக திரையிடப்பட்டது. முன்னதாக பாப்பம்பாடி ஜமா பெரிய மேளத்தின் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image