போளூரில்தீயணைப்பு துறை சார்பில் செயல்முறை விளக்க முகாம்

தேசிய பேரிடர் மேலாண்மை குறைப்பு நாளையொட்டி போளூரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. போளூர் வருவாய்த்துறை மற்றும் தீயணைப்புத்துறை இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். தாசில்தார் ஜெயவேல் தலைமை தாங்கி கொடியசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் கருணாகரன், தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு கோ‌‌ஷங்கள் எழுப்பியவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக சென்றனர்.அங்கு தீயணைப்பு வீரர்கள் மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். நிலநடுக்கம், நிலஅதிர்வு ஏற்படும் போது பள்ளியில் தங்களை எப்படி பாதுகாத்து கொள்வது, தீ விபத்து காலங்களில் எவ்வாறு முன் எச்சரிக்கையாக செயல்படுவது, வெள்ளப்பெருக்கின் போது தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது, சமையலின் போது தீ பற்றினால் காப்பது எப்படி என பல்வேறு செயல் விளக்கங்கள் செய்து காண்பித்தார்கள்.இதில் தலைமை ஆசிரியர் தாமரைசெல்வி, துணை தாசில்தார்கள் அனந்தகுமாரி, மஞ்சுளா, பேரூராட்சி முன்னாள் தலைவர் ராணிசண்முகம், பள்ளி துணை ஆய்வாளர் வேங்கடசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகியவை இணைந்து பேரிடரின் போது மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை தீயணைப்பு துறையின் மாவட்ட அலுவலர் குமார் தொகுத்து வழங்கினார். இதில் நோயாளிகளை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்தும், 3 வகையான தீ விபத்துகளை எவ்வாறு தீயணைப்பான் கொண்டு அணைப்பது பற்றியும் தீயணைப்பு துறையினரால் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாட பட்டாசு வெடிக்கும் போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை பற்றி துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் கலெக்டர் வழங்கினார்.நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி டீன் ‌‌ஷகீல்அகமது, தாசில்தார் அமுல் மற்றும் மருத்துவர்கள், வருவாய்த்துறையினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..