Home செய்திகள் திருவாடானை தொகுதியில் ரூ.4.12 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் விலையில்லா தாலிக்கு தங்கம்

திருவாடானை தொகுதியில் ரூ.4.12 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் விலையில்லா தாலிக்கு தங்கம்

by mohan

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பில், இராமநாதபுரம்   மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில்நடைபெற்ற விழாவில் ,636 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 12 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் தலா 8 கிராம் விலையில்லா தங்கம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் முன்னிலை வகித்தார்.மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:தமிழக அரசு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை மூலம் பெண்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது. பெண் கல்வி ஊக்குவிக்கும் நோக்கில் 2011-ஆம் ஆண்டு முதல் ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் விலையில்லா தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. 2011-12 முதல் 2016-17-ஆம் நிதியாண்டு வரை பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50,000, பிளஸ் 2 படித்த பெண்களுக்கு ரூ.25,000 திருமண திருமாங்கல்யத்திற்கு விலையில்லா 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இத்திட்டன் கீழ் 2011-12ஆம் நிதியாண்டு முதல் 2016-17ஆம் நிதியாண்டு வரை 22,972 ஏழை பெண்கள் ரூ.93.16 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் பெற்று பயனடைந்துள்ளனர். 2017-ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த 4 கிராம் தங்கம் 8 கிராம் தங்கமாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை 8,261 ஏழை பெண்கள் ரூ.51.19 கோடி மதிப்பில் நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் பெற்று பயனடைந்துள்ளனர். திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 304 பட்டதாரி பெண்கள், 334 பட்டதாரி அல்லாத பெண்கள் என 636 பேருக்கு ரூ.4 கோடியே 12 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் தலா 8 கிராம் விலையில்லா தங்கம் வழங்கப்பட்டது என்றார். மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) வ.ஜெயந்தி, மாவட்ட சமூக நல அலுவலக கண்காணிப்பாளர் முத்துலட்சுமி உட்பட அரசு அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!