வைகை அணை இருந்து தண்ணீர் திறப்பு எதிரொலி. அணைப்பட்டி பகுதியில் நெல் நடவு பணி தீவிரம்..

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணையில் இருந்து கடந்த மாதம் பெரியாறு பிரதான கால்வாயில்  பாசனத்திற்காக தமிழக முதல்வர் உத்தரவுப்படி தண்ணீர் திறக்கப்பட்டது.   விவசாயத்திற்காக   பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் ,நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள செக்காபட்டி ,  சிவஞானபுரம் ,சித்தர்கள் நத்தம்,, விளாம்பட்டி, மட்டப்பாறை ,ராமராஜபுரம், முத்துலிங்காபுரம், உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் கடந்த மாதம் நெல் நாற்றுக்களை பாவி  தயாராக வைத்தனர்..     தற்போது வைகை ஆறு அருகே பெரியார் பிரதான கால்வாயில் தண்ணீர் சொல்வதால் அதனை பயன்படுத்தி விவசாயிகள் தற்போது கடந்த சில நாட்களாக நெல் நாற்று நடவு பணி தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.. இருப்பினும் வைகை பெரியாறு பிரதான கால்வாய் நீரை மட்டும் வைத்து நெல் சாகுபடி செய்தாலும் மழை பெய்தால் நெல் சிறப்பாக வளரும் என விவசாயிகள் மிகுந்த அளவில் மழையை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.       வருகிற இந்த ஆண்டு வரும் வருண பகவான் கை கொடுப்பாரா  விவசாயிகள் பேசிக்கொண்டனர் .

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image