Home செய்திகள் பிராந்திய விரிவடைந்த பொருளாதார வர்த்தக கூட்டு ஒப்பந்தத்தால் (RECP) இந்திய விவசாயத்திற்கு போராபத்து- பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை

பிராந்திய விரிவடைந்த பொருளாதார வர்த்தக கூட்டு ஒப்பந்தத்தால் (RECP) இந்திய விவசாயத்திற்கு போராபத்து- பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை

by mohan

பிராந்திய விரிவடைந்த பொருளாதார வர்த்தக கூட்டு ஒப்பந்தத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பின்வருமாறு விளக்கமளித்தார்.உலக வர்த்தக ஒப்பந்தத்தால் குற்றுயிரும் குலையுயிருமாக உள்ள இந்திய விவசாயத்தை முற்றாக ஒழித்து கட்ட RCEP (ஆர்செப் என்ற Regional Comperehensive Econimic partnership) என்ற புதிய வர்த்தக ஒப்பந்தம் வழிவகுக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வொப்பந்தம் புரூனி, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மார், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், சீனம், இந்தியா, தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய 16 நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்படும் தடையில்லா வணிக ஒப்பந்தமாகும்.2011ல் தொடங்கப்பட்ட இந்த ஒப்பந்தம் குறித்த அரசு மட்ட பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை தற்போது எட்டி உள்ளதாக தெரியவருகிறது. மேலும். வரும் நவம்பரில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படவுள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்து எந்தவொரு விவரங்களும் இதுவரை வெளிப்படையாக இந்திய அரசு வெளியிடவில்லை. விவசாயிகள் மீது அக்கறைக்கொண்ட சிலரால் இத்தகவல்கள் மட்டுமே வெளி வந்துள்ளது. இது குறித்து இந்திய விவசாயிகளிடமோ, அரசியல் கட்சிகளிடமோ, மாநில அரசுகளிடமோ வெளிப்படையாக கருத்துக் கேட்புநடத்தவில்லை.பாராளுமன்றத்தில்விவாதிக்கப்படவில்லை. பாராளுமன்ற நிலைக்குழுவில் கூட விவாதிக்கப்படவில்லை என தெரிய வருகிறது.ஆனால் பெரும்தொழில் நிறுவனங்களுடனும், பால் வணிகத்தில் உள்ள பெரு நிறுவனங்களிடம் மட்டும் ஓரிரு கலந்துரையாடல்களை மறைமுகமாக நடத்தியுள்ளதாக தெரியவருகிறது. அதன் மூலம் இந்த ஒப்பந்தத்தின் பேரபாயம் குறித்து தகவல்களும் வெளிவந்துள்ளது.

இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு இந்தியா கையெழுத்திட்டால் இறக்குமதி வரி ஏதுமின்றி பெருவாரியான விவசாயப் பொருட்கள் தடையின்றி இறக்குமதியாகும்.மேலும் இந்தியாவை விட பல மடங்கு குறைவான சிலவில் உற்பத்தி செய்யும் ஒப்பந்தத்தில் இடம் பெரும் பல நாடுகள் தங்களிடம் உபரியாக இருப்பு வைத்துள்ள பல விவசாயப் உற்பத்தி பொருட்களை இந்திய சந்தையில் குறைந்த விலையில் விற்பனை செய்ய தயாராக உள்ளன, (ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து இரண்டும் பால் உற்பத்தி பொருட்களை உபரியாக தேக்கி வைத்துள்ள ஸநாடுகள்). சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயக் குடும்பத்தினர் கால்நடை வளர்ப்பையும், பால் உற்பத்தியையும் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

60% இந்திய விவசாயிகளின் வாழ்க்கையே பால் உற்பத்தியையே நம்பி உள்ள நிலையில், பால் மற்றும் பால் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை தடையின்றி வெளிநாடுகளிலிருந்து கர்ப்பரேட் நிறுவாங்கள் தன் விருப்பத்திற்கு இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து மலிவு விலையில் விற்பனை செய்ய தொடங்கும் போது இந்திய விவசாயிகளின் நிலை படு மோசமாகும். மேலும் விவசாய உற்பத்தி பொருட்களை கார்ப்ரேட் நிறுவனங்களின் வர்த்த சூதாட்டத்தில் சிக்கி எதிர்கொள்ள முடியாமல் இந்திய விவசாயம் அழிந்து போகும் நிலை ஏற்படும்.

இனி இந்திய விவசாயிகள் விதைகளை சேமித்து வைப்பதோ, பரிமாறிக் கொள்வதோ குற்றமாகி, நீதிமன்றத்தின் வாயில்களில் நிற்க நேரிடும். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக இந்திய அரசு வழங்கியுள்ள சலுகைகள், உரிமைகள் தங்களின் வணிக நலன்களுக்கு எதிராக உள்ளது எனக் கூறி சர்வதேச நீதிமன்றங்களில் இந்திய அரசை நேர் நிறுத்தும் அவல நிலை ஏற்படும்.ஒப்பந்தம் நிறைவேறும் பட்சத்தில் இந்திய நீதிமன்றங்களுக்கும், சட்டத்திட்டங்களுக்கும் இந்த ஒப்பந்தம் கட்டுப்படாது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு அப்பாற்பட்டவைகளாகவும் அமையும். அன்னிய நிறுவனங்கள் இந்திய விளைநிளைங்களை எவ்விதத் தடையுமின்றி தன் விருப்பத்திற்கு வாங்கிக் குவிக்கலாம். மேலும் இந்திய விவசாயிகளுக்குரிய அத்தனை சலுகைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இதன் மூலம் மறைமுகமாக ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற பேரழிவு திட்டங்களை விருப்பத்திற்கு நிறைவேற்றிக் கொள்ள முடியும். விவசாயத்தை விட்டு தானே விவசாயிகள் வெளியேறும் நிலையை ஏற்படுத்தும் மறைமுக அரச பயங்கரவாதமுமாகும். இந்த 15 நாடுகளுடனான இந்திய ஏற்றுமதியானது இறக்குமதியை விடக் குறைவாகவே உள்ள நிலையில் இந்த (ஆர்செப்) தடையில்லா வணிக ஒப்பந்தத்தால் இந்தியாவின் வர்த்தக ஏற்றுமதி பற்றாக்குறையே நீடிக்குமே ஒழிய குறையாது. ஏற்கேனவே போடப்பட்ட ஒப்பந்தங்களால் இடியாப்பச் சிக்கலில் சிக்கி தற்கொலையில் விடுதலையைத் தேடும் இந்திய விவசாயிகள், ஆர்செப் ஒப்பந்தத்தின் விளைவுகளை எதிர்கொள்ள முடியாத நிலையில் வாழ்வாதாரம் முற்றிலும் அழியும் நிலை ஏற்படும்.

வளர்ந்த நாடுகளில் உள்ள விவசாயிகளுக்கான சலுகைகள் மானியங்கள் நம்மை பெருமூச்சு விடச் செய்து கொண்டிருக்க, இருக்கும் அரைகுறை சலுகைகளும் முற்றிலும் அபகறிக்கும் பேராபத்து ஏற்படும்.ஆகவே “ஆர்செப் ஒப்பந்தத்தில் இருந்து விவசாயம், பால, பால் பொருட்கள் மற்றும் கடல் சார் உணவு வகைகள் குறித்த அனைத்தையும் விலக்கி வைக்க வேண்டும்,” என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும் இயக்கம் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுமையிலும் வரும் அக். 24ம் தேதியன்று கவன ஈர்ப்பு நிகழ்வாக, மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் தரும் வகையில் போராட்ட தினமாக கருதி மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக தமிழக அரசிற்கும், நேரிடையாகவோ மத்திய அரசின் வர்த்தக துறை அமைச்சகத்திற்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ளோம்.

கேரளா, கர்நாடக அரசுகள், மற்றும் அம்மாநில பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசிற்கு ஆர் செப் ஒப்பந்தத்தில் விவசாயம், பால் உள்ளிட்ட விவசாய உற்பத்தி பொருட்கள் இணைப்பதை கைவிட வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளனர். இதனை பின்பற்றி தமிழக முதலமைச்சரும் விரிவான கடிதம் எழுதி கைவிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டுகிறோம். தமிழகத்தை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது எதிர்ப்பினை கடிதம் மூலம் மத்திய அரசிற்கு தெரிவிப்பதோடு, போராட்டங்களிலும் பங்கேற்று ஆதரவளித்திட வேண்டுகிறோம். இவ்வாறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!