“போரில் சரணடைந்த புலிகள் விடுவிப்பு..!” – கோத்தாபய தெரிவிப்பு

“இறுதிக்கட்ட போரின்போது ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அனைவருக்கும் புனர்வாழ்வளித்து, அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்” என்று, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.கொழும்பில் உள்ள சங்கரில்லா ஹோட்டலில் இன்று (15ம் தேதி) பொதுஜன பெரமுன கட்சி சார்பில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்ட பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சே பேசியதாவது;

“தேர்தலில் நான் வெற்றிபெற்று ஜனாதிபதியானால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க மாட்டேன். ஆட்சி மாற்றத்தில், போர்க் குற்றச் சாட்டுகளுக்கு பதிலளிப்போம். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ராணுவத்திற்கு தான் தலைமை தாங்கவில்லை. இறுதிக்கட்ட போரின்போது, ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அனைவருக்கும் புனர்வாழ்வளித்து, அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.

– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து

புனித ரமலான் வாழ்த்துக்கள்..