Home செய்திகள் ராமநாதபுரம் அருகே இருமேனி அரசு மேல்நிலைப்பள்ளியில் கை கழுவும் தினம்

ராமநாதபுரம் அருகே இருமேனி அரசு மேல்நிலைப்பள்ளியில் கை கழுவும் தினம்

by mohan

இராமநாதாபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 90 அரசு பள்ளிகளில் மும்பை பங்கு சந்தை நிறுவன நிதி உதவியுடன் கிராமாலயா தொண்டு நிறுவனம் (திருச்சி)சார்பில் சர்வதேச கை கழுவும் தினம் கொண்டாடபட்டது. கை கழுவும் தினத்தை சிறப்பிக்கும் விதமாக 15,000 பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் கைகளை சோப் போட்டு கை கழுவினர் மற்றும் கை கழுவும் முக்கியத்துவம் குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதன் தொடக்க நிகழ்வாக கிராமாலயா தொண்டு நிறுனம் மும்பை பங்கு சந்தை நிறுவனம் நிதியுதவியுடன் இருமேனி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாரமத்து செய்யப்பட்ட கழிவறையை ராமநாதபுரம் கூடுதல ஆட்சியர் (வளர்ச்சி) எம்.பீரதீப் குமார் திறந்து வைத்தார். கை கழுவும் அவசியம் குறித்து மாணவர்கள் செயல்படுத்த வேண்டும். வாழ்வில் உயர்ந்த இலட்சியங்களை அடைய அயராத கடின உழைப்பு, மனஉறுதி வேண்டும் என்றார். மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் அலுவலர் பி.ஜெயந்தி, மண்டபம் கல்வு மாவட்ட அலுவலர் ந.பாலதண்டயாயுதபாணி, மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரமோகன் (கிராம ஊராட்சி), மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகநாதன்(வட்டார ஊராட்சி), தலைமை ஆசிரியர் நா.டேவிட் மோசஸ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவா, கிராமாலயா தொண்டு நிறுவன திட்ட ஓருங்கிணைப்பாளர் பவுல் அந்தோணி ராஜ், பழனியாண்டி , இருமேனி ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (தூய்மை பாரதம் இயக்கம்)நவநீதம், யூனிசெப் நிறுவன தமிழக ஆலோசகர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!