ராணுவ ஆட்சி வேண்டுமா சிநேகப்பூர்வ ஆட்சி வேண்டுமா..?” – சஜித் பிரேமதாஸ

“நாட்டை, ராணுவ ஆட்சியின் கீழ் கொண்டு வருவதா அல்லது சிநேகப்பூர்வ ஆட்சியின் கீழ் கொண்டு வருவதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்” என்று, இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மற்றும் மேற்கு கொழும்பு தொகுதி கூட்டம், மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தலைமையில் கொழும்பு பொது நூலக கூடத்தில் நடைபெற்றது. இதில், புதிய ஜனநாயக முன்னணியின் (ஐக்கிய தேசிய முன்னணி) ஜனாதிபதி வேட்பாளரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ பேசியதாவது; “உலகில் சிறந்த நாடாக இலங்கையை உருவாக்குவேன். அடியாட்களையும் உதவியாட்களையும் வைத்துக் கொண்டு நாட்டை நிர்வகிக்க முடியாது.மக்கள் மத்தியில் சென்று அவர்களின் மனங்களை வென்று சேவையாற்றும் திறமை எமக்கு உண்டு. நாட்டை, ராணுவ ஆட்சியின் கீழ் கொண்டு வருவதா அல்லது சிநேகப்பூர்வ ஆட்சியின் கீழ் கொண்டு வருவதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். – சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து

புனித ரமலான் வாழ்த்துக்கள்..