யாழ்ப்பாணத்தில் தரையிறங்கியது முதலாவது இந்திய விமானம்..!

இந்திய தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவுடன் சென்ற ஏர் இந்தியா அலைன்ஸ் விமானம், யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் இன்று 15.10.19 வெற்றிகரமாக தரையிறங்கியது. இலங்கையின் பலாலி விமான நிலையம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தை, இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்து வரும் 17ம் தேதி திறந்து வைக்கவுள்ளனர்.

இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு வாரத்தில் ஏழு சேவைகளை நடத்துவதற்கு, ஏர் இந்தியாவின் அலையன்ஸ் ஏர் நிறுவனத்துக்கு இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.இந்நிலையில், இந்திய தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவுடன் இன்று யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திற்கு சென்ற ஏர் இந்தியா அலைன்ஸ் விமானம், அங்கு வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்திய அதிகாரிகள், யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை, கட்டுப்பாட்டு கோபுரம் போன்றவைகளின் தரம் மற்றும் விமான நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆராயவுள்ளனர்.இதனிடையே, வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள விமான நிலைய திறப்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து

புனித ரமலான் வாழ்த்துக்கள்..