உசிலம்பட்டி அருகே பள்ளி மாணவி தலையில் பலத்த காயத்துடன் படுகொலை.

உசிலம்பட்டி அருகே பள்ளி மாணவி தலையில் பலத்த காயத்துடன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த கொலை சம்பவம் தொடர்பாக வாலிபரை பிடித்து போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஓணாப்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி மதுரை செல்லூரில் வசித்து வருகிறார்.

இவரது மகள் சந்தியா தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த சூழலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஓணாப்பட்டியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு தனது பாட்டி செல்லம்மாள் வீட்டிற்கு வந்திருந்தாகவும், நேற்று மாலை அவர்களது தோட்டத்திற்கு சென்று குளித்துவிட்டு வருவதாக சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. பல இடங்களிலும் தேடி கிடைக்காத நிலையில் இன்று அவர்களது தோட்டத்தின் அருகே உள்ள மலைக் குண்றில் தலையில் பலத்த காயத்துடன் சந்தியா பிணமாக கிடந்துள்ளர்.

சம்பவமறிந்து விரைந்து வந்த சேடபட்டி போலிசார் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலிசார் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்ற வாலிபரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..