உசிலம்பட்டி நகராட்சி சார்பில் டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி..

உசிலம்பட்டி நகராட்சி சார்பில் டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உசிலம்பட்டி நகராட்சி சார்பில் மாணவிகளுக்கு டெங்கு விழிப்பணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவிகளிடம் டெங்கு கொசு உற்பத்தியாகும் விதம், எங்கெங்கு கொசுக்கள் உற்பாத்தியாகிறது போன்றவைகளை நகராட்சி அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

மேலும் பழைய டயர், தேங்காய்கூடுகள், வீட்டில் உள்ள தொட்டிகள் போன்றவைகளில் மழைநீர் தேங்கவிடாமல் பாதுகாக்க வேண்டுமென கேட்டுகொண்டனர். அதனைதொடர்ந்து மாணவிகள் டெங்கு வராவிடாமல் தங்களது வீடுகள், சுற்றுபுறங்களை சுத்தமாக வைத்தகொள்வோம் என உறுதிமொதி எடுத்துகொண்டனர். இந்நிகழச்சியில் நகராட்சி ஆணையாளர் அழகேஸ்வரி, நகராட்சி சுகாதாரதுறை அதிகாரி அகம்மதுகபீர், தூய்மைதிட்ட மேற்பார்வையாளர் பாண்டி, பள்ளி தமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், நகராட்சி அதிகாரிகள் உட்பட ஏராளமான மாணவிகள்; கலந்துகொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..