உசிலம்பட்டி அருகே வேப்பமரத்தில் பால் வடிந்த அதிசயம்.

உசிலம்பட்டி அருகே வேப்பமரத்தில் பால் வடிந்த அதிசயம், பொதுமக்கள் பக்தியுடன் வழிபாடு செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டி கிராமத்தின் மலையடிவாரத்தில் குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த வைரவன் என்பவரது தோட்டம் உள்ளது. இவரது தோட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு வேப்பமரத்தை நட்டு வைத்து பராமரித்து வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்போது இந்த மரம் பெரிய மரமாக வளர்ந்துள்ள சூழலில் இந்த வேப்பமரத்தில் கடந்த வெள்ளி கிழமை முதல் பால் வடிந்ததைக் கண்ட வைரவன் உறவினர்களிடம்தெரிவித்துள்ளர்.உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அம்மன் அருளால் வேப்பமரத்தில் பால் வடிவதாக கூறி வழிபாடு செய்ய சொன்னதையடுத்து வைரவன் இந்த மரத்திற்கு சேலை அணிவித்து, சந்தனம் குங்குமம் இட்டு மாலை மரியாதையுடன் இன்று காலை பொங்கல் வைத்து பூஜை செய்தாக கூறப்படுகிறது.

இந்த செய்தி ஊர் முழுவதும் பரவ பூச்சிபட்டி, குஞ்சாம்பட்டி, நக்கலப்பட்டி என சுற்றுவட்டரப் பகுதிகளில் உள்ள கிராம மக்கள் வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயத்தை நேரில் வந்து பார்வையிட்டு பத்தி சூடம் ஏற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.மேலும் இது குறித்து விவசாயத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது தற்போது குளிர்காலம் என்பதால் வேப்ப மரத்திலிருந்து ஒரு வித வெள்ளைநிற திரவம் வெளிவரும் எனவும், இதனை மக்கள் பால் வடிவதாக எண்ணி வழிபாடு செய்து வருவதாக தெரிவித்தனர்.இது ஒருபுறம் இருக்க வேப்பமரத்தில் பால் வடியும் செய்தி உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..