வேலைவாய்ப்பற்ற இளையோருக்கான உதவித்தொகை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரமாக உயர்வு.. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தகவல்

வேலைவாய்ப்பற் இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பிற்கு காத்திருக்கும் இளையோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 9ஆம் வகுப்பு தேறிபத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200ம், 10ம் வகுப்பு தேறியோருக்கு மாதம் ரூ.300ம், பிளஸ் 2 தேறியோக்கு மாதம் ரூ.400ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டிற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்தொகை நேரடியாக மனுதாரரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இது வரை, உதவித்தொகை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.50 ஆயிரமாக இருந்தது. தற்போது அரசாணை (நிலை) எண்.127 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (ஆர் 2) துறை, ஜூலை 25, 2019 படி பயனாளியின் பெற்றோர் அல்லது கணவன் அல்லது மனைவி ஆகியோரின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்பதை திருத்தி ஆண்டு உச்சவரம்பு வருமானம் ரூ.72 ஆயிர(ரூபாய் எழுபத்தித்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனஆணையிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பற் இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் புதிதாக பயன்பெற விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து செப். 30ல் 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும் .பதிவை தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். தற்போது அன்றாடம் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் மருத்துவம், பொறியியல், கால்நடை மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் உட்பட தொழில் சார்ந்த பட்டப் படிப்பு முடித்தோர் இத்திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற இயலாது. வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறன் இளையோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தவறிய மற்றும் தேறியோருக்கு மாதம் ரூ.600ம், பிளஸ் 2 தேறியோருக்கு மாதம் ரூ.750ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் பத்து ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து செப்.30ல் ஓராண்டுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். ஏற்கனவே உதவித்தொகை பெறுவோர் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை எ மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image