நாங்குநேரியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நூதன பிரச்சாரம்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பல அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு பல வழிகளில் பல்வேறு நவீன யுக்திகளையும்,நூதன வழிகளையும் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் நாங்கு நேரி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அதிமுகவினர் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்போடு தேர்தல் களத்தில் 10 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தங்கியிருந்து பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் தமிழக முதல்வரும் எடப்பாடி பழனிசாமியும் நாங்குநேரி தொகுதியில் மூன்று நாள் சூறாவளி பிரச்சாரத்தை மேற்க்கொண்டு வருகிறார்..இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் புவனேஸ்வரி நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஆதரவாக விசித்திரமான முறையில் நூதன பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அதாவது நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட வயல்வெளிகளில் வேலை பார்க்கும் பெண்களிடம் நேரடியாக சென்று இரட்டை இலை சின்னத்தை கையில் வைத்துக்கொண்டு இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார். வயலில் உழுது கொண்டிருக்கும் விவசாயிகளை நேரில் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். மேலும் வாழை மரத்தோப்பில் அமர்ந்து வாழை விவசாயிகளோடு உரையாடி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். மேலும் டிராக்டர் வண்டியில் ஏறி டிராக்டர் ஓட்டும் விவசாயி அருகே உட்கார்ந்து கொண்டும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..